December 28 , 2025
4 days
58
- நீண்டகால சந்திர ஆய்வுப் பயணங்களை ஆதரிப்பதற்கு சந்திரனில் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை நிறுவும் திட்டத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
- இந்தத் திட்டத்தை ரஷ்யாவின் அரசுக்குச் சொந்தமான விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் உருவாக்கி வருகிறது.
- இந்தச் சந்திர மின் உற்பத்தி நிலையம் ஆனது 2036 ஆம் ஆண்டிற்குள் செயல்படத் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
- இது சந்திர உலாவிக் கலங்கள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி உள்கட்டமைப்புகளுக்கு ஆற்றலை வழங்கும்.
- இந்தத் திட்டம் கூட்டு ரஷ்ய-சீன சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்துடன் (ILRS) இணைக்கப்பட்டுள்ளது.
- ரோசட்டம் மற்றும் குர்ச்சடோவ் நிறுவனம் ஆகியவை இதில் ஈடுபட்டுள்ளன என்ற நிலையில் இது அணுசக்தியின் பயன்பாட்டைக் குறிக்கிறது.
- நீண்ட கால ஆய்வுப் பயணங்களுக்கு அதன் நம்பகத் தன்மை காரணமாக அணுசக்தி ஆனது சந்திரனுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.
Post Views:
58