ரஷ்யா 'கபரோவ்ஸ்க்' எனப்படும் தனது புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலினைப் படையில் இணைத்தது.
இது 'டூம்ஸ்டே எறிகணை' என்றும் அழைக்கப்படும் 'போஸிடான்' என்ற நீருக்கடியில் இயங்கும் அணுசக்தி கொண்ட ஆளில்லா வாகனங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த எறிகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது என்பதோடு மேலும் கடலோர நாடுகளை மாபெரும் அழிவின் மூலம் "முற்றிலும்" அழிக்கக் கூடியது.