ராஜஸ்தான் கட்டாய திருமணப் பதிவு (திருத்தம்) மசோதா, 2021
September 23 , 2021 1416 days 656 0
முதல்வர் அசோக் கெஹ்லாட் அவர்களின் அரசானது 2009 ஆம் ஆண்டு சட்டத்தைத் திருத்துவதற்காக 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் கட்டாய திருமணப் பதிவு (திருத்தம்) என்ற ஒரு மசோதாவினை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.
ராஜஸ்தானின் இந்தப் புதிய திருமண மசோதாவானது மணமகனும் மணமகளும் 30 நாட்களுக்கும் மேலாக தாம் வசிக்கும் இடத்திலுள்ள திருமணப் பதிவு அதிகாரியிடம் தங்களது திருமணப் பதிவிற்காக விண்ணப்பிக்கலாம் எனக் கூறுகிறது.
21 வயது பூர்த்தியடையாத மணமகனுக்கும் 18 வயது பூர்த்தியடையாத மண மகளுக்கும் நடைபெற்ற திருமணத்தை, திருமணமான 30 நாட்களுக்குள் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பதிவு செய்யலாம்.