மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் தி இந்து பதிப்பக குழுமத்தின் தலைவரான என். இராம், புகழ்பெற்ற ராஜாராம் மோகன் ராய் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பத்திரிக்கைத் துறையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக இந்தியப் பத்திரிக்கைக் கழகத்தால் (Press Council of India - PCI) இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
மேலும் இந்தியப் பத்திரிக்கைக் கழகமானது 2018 ஆம் ஆண்டில் பத்திரிக்கைத் துறையில் சிறப்புத்துவத்திற்கான தேசிய விருதுகளை வென்றவர்களையும் அறிவித்துள்ளது.
புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “விளையாட்டுச் செய்திகள்” என்ற பிரிவில் எந்தவொரு விண்ணப்பமும் விருதுக்குத் தகுதி பெறவில்லை.
விருதுப் பிரிவு
பெறுநர்
பத்திரிக்கை / நாளிதழ்
கிராமப்புற பத்திரிக்கையியல்
ரூபி சர்க்கார்
தேசபந்து
ராஜேஷ் பரசுராம் ஜோஷ்டே
புதரி நாளிதழ்
மேம்பாட்டுச் செய்திகள்
விஎஸ் ராஜேஷ்
கேரளா கௌமுதி
புகைப்படப் பத்திரிக்கை – ஒற்றைச் செய்திகள்
சுபாஷ் பால்
ராஷ்டிரிய சஹாரா
புகைப்படப் பத்திரிக்கை -புகைப்பட சிறப்பம்சங்கள்
மிஹிர் சிங்
பஞ்சாப் கேசரி
சிறந்த கலை நாளிதழ்: கருத்துச் சித்திரம், கேலிச் சித்திரம் மற்றும் விளக்கப் படங்கள்