ராஜேஷ் பூஷண் இந்திய ஆட்சிப் பணி, செயலாளர் (பாதுகாப்பு)
November 2 , 2019 2082 days 718 0
தற்போது அமைச்சரவைச் செயலகத்தில் செயலாளராக (ஒருங்கிணைப்பு) இருக்கும் 1987 ஆம் ஆண்டு பீகார் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ராஜேஷ் பூஷணுக்கு கூடுதல் பொறுப்பாக அமைச்சரவை செயலகத்தில் செயலாளர் (பாதுகாப்பு) பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பாதுகாப்புப் படையின் (SPG – Special Protection Group) நிர்வாகத் தலைவர் செயலாளர் (பாதுகாப்பு) ஆவார்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும் பணியை இவர் மேற்கொள்கின்றார்.
மேலும் மாநில அரசுகள் மற்றும் மத்தியக் காவல் படையினர் ஆகியோரால் குறுக்கீட்டழிப்பிகளை (ஜாமர்கள்) வாங்குவது தொடர்பான கொள்கையைப் பொறுத்த வரையில் அவர் ஒரு தலைமை அதிகாரியாகவும் பணியாற்றுகின்றார்.