ராஜோலிபண்டா மாற்றுத் திட்டத்தில் உள்ள நீர் பகிர்வு மற்றும் நீரோட்டச் சிக்கல்கள் குறித்து மத்திய அரசு மற்றும் அண்டை மாநிலங்களிடம் தெலுங்கானா நிரந்தரத் தீர்வைக் கோரியுள்ளது.
இத்திட்டம் தெலுங்கானாவின் பாலமூர் (மகபூப்நகர்) பகுதியில் உள்ள 75 கிராமங்களில் சுமார் 83,900 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசன வசதியை வழங்குகிறது.
தெலுங்கானாவிற்கு 17.9 டிஎம்சி நீர் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் நீரோட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 6 டிஎம்சி நீரை மட்டுமே அதனால் பெற முடிகிறது.
துங்கபத்திரை நதி அமைப்பில் ஏற்படும் அதிகப்படியான வண்டல் படிவு, கால்வாய் முகப்பில் உள்ள கட்டமைப்புப் பிரச்சனைகள் மற்றும் நதி நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இதிலுள்ள முக்கியப் பிரச்சனைகளாகும்.
கால்வாய்களில் நீர் நுழைவதை மேம்படுத்துவதற்காக தூர்வாருதல், தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் தடுப்புச் சுவர் அமைத்தல் ஆகியவற்றை 2004 ஆம் ஆண்டின் நிபுணர் குழு பரிந்துரைத்தது.
ராஜோலிபண்டா நீர்மாற்றுத் திட்டம் (RDS) என்பது கிருஷ்ணா நதியின் துணை நதியான துங்கபத்ரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பாசனத் திட்டமாகும்.
வறட்சியால் பாதிக்கப்படக் கூடிய விவசாயப் பகுதிகளுக்கு இது ஒரு இன்றியமையாத உயிர்நாடியாக விளங்குகிறது என்பதோடு மேலும், இது தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று ஆற்றங்கரை மாநிலங்களுக்குப் பயன் அளிக்கிறது.