ராணி கைடின்லியு பழங்குடியினச் சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகம்
November 24 , 2021 1269 days 547 0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூரில் உள்ள லுவாங்காவ் கிராமத்தில் ராணி கைய்டின்லியு பழங்குடியினச் சுதந்திரப் போராட்ட அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
லுவாங்காவ் கிராமம் ஒரு புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனையான ராணி கெய்டின்லியுவின் பிறப்பிடமாகும்.
தனது13 வயதில், மணிப்பூரில் உள்ள ஹெராகா சமய இயக்கத்தில் அவர் சேர்ந்தார்.
அவ்வியக்கம் மணிப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாகா வசிப்பிடப் பகுதிகளில் இருந்து ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பதை நோக்கமாகக் கொண்டது.
1932 ஆம் ஆண்டு தனது 16வது வயதில் கைய்டின்லியு ஆங்கிலேயர்களால் கைது செய்யப் பட்டார்.
1937 ஆம் ஆண்டில் ஷில்லாங் சிறையில் கைடின்லியுவைச் சந்தித்த ஜவஹர்லால் நேரு அவருக்கு "ராணி" என்ற பட்டத்தை வழங்கினார்.
இறுதியாக 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு சிறையில் இருந்து அவர் விடுவிக்கப் பட்டார்.