TNPSC Thervupettagam

ராபர்ட் ஏ.எஃப். தர்மனின் மறைவு

June 24 , 2026 9 days 82 0
  • திபெத்திய பௌத்த மதத்தினைச் சார்ந்த அமெரிக்க அறிஞரான ராபர்ட் ஏ.எஃப். தர்மன் (1941-2026), அமெரிக்காவில் தனது 84வது வயதில் காலமானார்.
  • இவர் புகழ்பெற்ற எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர் மற்றும் திபெத்திய கலாச்சாரம் மற்றும் பௌத்த போதனைகளை ஊக்குவிக்கும் Tibet House US அமைப்பின் இணை நிறுவனர் ஆவார்.
  • அவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, பௌத்த மதத்தைத் தழுவியதோடு தலாய் லாமாவின் வழிகாட்டுதலின் கீழ் பௌத்த துறவியானார்.
  • பௌத்த துறவியாக மூன்று ஆண்டுகள் கழித்த அவர், பின்னர் மேற்கத்திய உலகில் திபெத்திய பௌத்த மதத்தின் முதன்மையான உரையாசிரியர்களில் ஒருவராக மாறினார்.
  • இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் 'இன்னர் ரெவொல்யூஷன்', 'இன்பினிட் லைஃப்' மற்றும் 'தி ஹோலி டீச்சிங் ஆஃப் விமலகீர்த்தி' ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்