ராபி பயிர் (குறுவைப் பயிர்கள்) விதைப்பு அதிகரித்தல்
January 4 , 2020
2041 days
918
- ராபி பயிர்களின் விதைப்புப் பகுதியானது 36 லட்சம் ஹெக்டேர் பரப்பு என்ற அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- ராபி பயிர்களின் மொத்த விதைப்புப் பகுதியானது கடந்த ஆண்டு 536 ஹெக்டேர் என்ற அளவில் இருந்தது. தற்பொழுது இது 571 ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
- ராபி பயிர் வளரும் மாநிலங்களில் மண்ணின் ஈரப்பதம் மேம்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
- இந்தியாவின் முக்கிய ராபி பயிர்கள் கோதுமை, பார்லி, எள், பட்டாணி, கடுகு ஆகியவையாகும்.
- ராபி பயிர்கள் குளிர் காலத்தில் விதைக்கப்பட்டு கோடைக் காலத்தில் அறுவடை செய்யப் படுகின்றன.
Post Views:
918