வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆனது ஜனவரி 16, 2026 ஆம் தேதி நிலவரப்படி ராபி பயிர்ச் சாகுபடி பரப்பளவு குறித்த தரவை வெளியிட்டது.
மொத்த ராபி பயிர்ச் சாகுபடி பரப்பளவு 652.33 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது என்பதோடுஇது கடந்த ஆண்டு இதே காலத்தை விட சுமார் 20.88 லட்சம் ஹெக்டேர் அதிகமாகும்.
கோதுமை பரப்பளவு சுமார் 6.13 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து, வலுவான விதைப்பு முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
பயறு வகைகளின் சாகுபடி பரப்பளவு 3.82 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது என்பதோடுபருப்பு வகைகளின் சாகுபடி பரப்பளவு அதிகபட்சமாக சுமார் 4.66 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.
எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பளவு 3.53 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது என்பதோடுஇதற்கு முக்கிய காரணம் ராப்சீட் மற்றும் கடுகு ஆகியனவற்றின் சாகுபடி ஆகும்.
மக்காச்சோளம் மற்றும் பார்லி ஆகியவற்றின் சாகுபடியுடன், சிறு தானியங்கள் மற்றும் பருமணி தானியங்களின் சாகுபடி பரப்பளவு 2.79 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.