TNPSC Thervupettagam

ராமர் கோவில் அறக்கட்டளை

February 11 , 2020 1974 days 711 0
  • அயோத்தியில்  ராமர் கோவிலைக் கட்டுவதற்காக 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தன்னாட்சி அறக்கட்டளை உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
  • இந்த அறக்கட்டளையானது “ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை” என்று பெயரிடப்பட இருக்கின்றது.
  • இந்திய உச்ச நீதிமன்றமானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 09 அன்று வழங்கப்பட்ட தனது தீர்ப்பில் 90 நாட்களுக்குள் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.
  • ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளையானது 15 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இதில் தலித்  சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறுவார்.
  • அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞரும் மூத்த வழக்குரைஞருமான K. பராசரன்  இந்த அறக்கட்டளையின் தலைவராகப் பணியாற்ற இருக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்