ராஷ்டிரபதி பவனில் உள்ள எட்வின் லுட்யன்ஸ் சிலைக்குப் பதிலாக சி. ராஜ கோபாலாச்சாரியார் சிலை அமைக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் அறிவித்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆவார்.
அவர் டிசம்பர் 10, 1878 அன்று சென்னை மாகாணத்தின் சேலத்தில் பிறந்தார்.
1930 ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்திற்குத் தலைமை தாங்கினார் என்பதோடுமேலும் அரசியலமைப்பு முடக்கநிலையை நிவர்த்தி செய்வதற்காக 1944 ஆம் ஆண்டு சி.ஆர் சூத்திரத்தையும் முன்மொழிந்தார்.
1954 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற முதல் நபர்களில் இவரும் ஒருவர்.
எட்வின் லுட்யன்ஸ் என்பவர் புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் மற்றும் பல முக்கியக் கட்டிடங்களை வடிவமைத்த பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஆவார்.