2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான காலக் கட்டத்தில் செயல்படுத்துவதற்காக வேண்டி, மத்திய அரசின் நிதி உதவியைப் பெறும், புதுப்பிக்கப் பட்ட ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான் என்ற திட்டத்தைத் தொடரப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம் இப்போது 15வது நிதிக்குழுவின் பதவிக் காலத்துடன் ஒன்றிணைந்து இயங்குகிறது.
இந்தத் திட்டம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது முதலில் 2018-19 முதல் 2021-22 வரை செயல்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டில் அமைச்சரவையால் முதன்முறையாக அங்கீகரிக்கப்பட்டது.