அண்டார்டிகாவின் ராஸ் பனிப்பாறைக்கு அடியில் சூரிய ஒளி இல்லாமல் வாழும் பல்வேறு வகையான நுண்ணுயிர் சமூகங்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த நுண்ணுயிரிகள் சூரிய ஒளிக்குப் பதிலாக அம்மோனியம், நைட்ரைட் மற்றும் சல்பர் சேர்மங்கள் போன்ற இரசாயனங்களை ஆற்றலுக்குப் பயன்படுத்தி வேதியியற் சேர்க்கை மூலம் உயிர்வாழ்கின்றன.
பனிப்பாறைக்கு அடியில் பாக்டீரியா, ஆர்க்கியா மற்றும் வைரஸ்கள் இணைந்து ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அண்டார்டிகாவில் அமைந்துள்ள ராஸ் பனிப்பாறையானது உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றாகும்.
கடுமையான சூழல்களில் உயிரினங்களின் வாழ்க்கை மற்றும் பிற கோள்களில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை அறிவியலாளர்கள் புரிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்பு உதவும்.