ரிசர்வ் வங்கியின் போக்கு மற்றும் செயல்பாட்டு அறிக்கை, 2020
January 4 , 2021 1656 days 817 0
இது வங்கித் துறையின் செயல்திறன் பற்றிய தகவல்களை வழங்குகின்றது.
இதில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவை அடங்கும்.
இந்த அறிக்கையானது வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 என்ற சட்டத்தின் வரிசையில் அமைந்த ஒரு சட்டரீதியான ஆவணமாகும்.
வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதமானது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 9.1 சதவீதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 7.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பட்டியிலிடப் பட்ட வணிக வங்கிகளின் அபாய அளவுள்ள சொத்து விகிதத்திற்கான மூலதனமானது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 14.3 சதவீதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் 15.8 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
இது பொதுத்துறை வங்கிகளை மறு மூலதனமாக்க உதவியுள்ளது.