TNPSC Thervupettagam

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய கடலடிக் கம்பிவட இணைப்பு

February 26 , 2022 1271 days 455 0
  • ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் என்ற நிறுவனமானது மாலத்தீவின் ஹுல்ஹிமாலே என்னுமிடத்தில் அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பத்தைச் சேர்ந்த மல்டி-ரெடாபிட் திறனுடைய இந்திய-ஆசிய எக்ஸ்பிரஸ் எனும் ஒரு கடலடிக் கம்பிவட அமைப்பினை நிறுவ உள்ளது.
  • உயர்திறன் மற்றும் அதிவேக திறனுடைய இந்த அமைப்பானது ஹுல்ஹிமாலே என்ற பகுதியை இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள உலகின் முக்கிய இணைய மையங்களுடன் நேரடியாக இணைக்கும்.
  • அதே சமயம், இந்திய – ஐரோப்பிய எக்ஸ்பிரஸ் எனும் ஒரு கம்பிவட அமைப்பானது இத்தாலியின் சவோனாவிலிருந்து மும்பை பகுதியை மிலன் நகருடன் இணைக்கிறது.
  • இதில் மத்தியக் கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியத் தரைக்கடல் ஆகிய பகுதிகளில் கூடுதல் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்