ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய கடலடிக் கம்பிவட இணைப்பு
February 26 , 2022 1401 days 505 0
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் என்ற நிறுவனமானது மாலத்தீவின் ஹுல்ஹிமாலே என்னுமிடத்தில் அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பத்தைச் சேர்ந்த மல்டி-ரெடாபிட் திறனுடைய இந்திய-ஆசிய எக்ஸ்பிரஸ் எனும் ஒரு கடலடிக் கம்பிவட அமைப்பினை நிறுவ உள்ளது.
உயர்திறன் மற்றும் அதிவேக திறனுடைய இந்த அமைப்பானது ஹுல்ஹிமாலே என்ற பகுதியை இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள உலகின் முக்கிய இணைய மையங்களுடன் நேரடியாக இணைக்கும்.
அதே சமயம், இந்திய – ஐரோப்பிய எக்ஸ்பிரஸ் எனும் ஒரு கம்பிவட அமைப்பானது இத்தாலியின் சவோனாவிலிருந்து மும்பை பகுதியை மிலன் நகருடன் இணைக்கிறது.
இதில் மத்தியக் கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியத் தரைக்கடல் ஆகிய பகுதிகளில் கூடுதல் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.