ரூ.8 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை கடந்த முதல் இந்திய நிறுவனம்
August 25 , 2018 2599 days 920 0
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL – Reliance Industries Limited) ஆனது ரூ.8 லட்சம் கோடி (144 பில்லியன் டாலர்) சந்தை மூலதனத்தை கடந்த முதல் இந்திய நிறுவனம் ஆகியுள்ளது.
இந்த RIL-இன் சந்தை மூலதன சாதனையானது முகேஷ் அம்பானியின் (இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்) சொத்துக்களை 48 பில்லியன் டாலர் அளவிற்கு (ப்ளும்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி) உயர்த்தியுள்ளது.
சந்தை மூலதனம் என்பது பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனத்தின் மதிப்பாகும். இது தற்போதைய பங்கு விலைகள் மூலம் மொத்த பங்குகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.