TNPSC Thervupettagam

ரூபெல்லா பாதிப்பு ஒழிப்பு – நேபாளம்

August 22 , 2025 17 hrs 0 min 20 0
  • நேபாள நாடானது ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக விளங்கிய ரூபெல்லா பாதிப்பினை ஒழித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பினால் உறுதிப்படுத்தப் பட்டு உள்ளது.
  • 2012 ஆம் ஆண்டில் நேபாளத்தின் நோய்த் தடுப்பு திட்டத்தில் ரூபெல்லா தடுப்பூசியானது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ரூபெல்லா என்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால் பிறக்கும் குழந்தைகளில் கடுமையான பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தும் ஒரு தொற்று தன்மை மிக்க வைரஸ் தொற்று ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டில், நேபாளத்தின் 95 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ரூபெல்லா தடுப்பூசியின் ஒரு தவணையையாவது பெற்றிருந்தனர்.
  • WHO அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ரூபெல்லா ஒழிப்பினை எட்டிய ஆறாவது நாடு நேபாளம் ஆகும்.
  • தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் ஆனது 2026 ஆம் ஆண்டுக்குள் தட்டம்மை மற்றும் ரூபெல்லா பாதிப்பினை ஒழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்