2022 ஆம் ஆண்டு 2வது ரூர்க்கி நீர்வள மாநாட்டினை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தொடங்கி வைத்தார்.
இது ரூர்க்கியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் தேசிய நீரியல் கல்விக் கழகம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.
இந்த மாநாடானது நீர்வளப் பாதுகாப்பு பற்றி புரிதல் குறித்தும், சமூக மேம்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாக நிலையான நீர் வளமேலாண்மையை ஆதரிக்கும் நீர்வளப் பாதுகாப்பின் பல அம்சங்களைப் பற்றிய புரிதல் குறித்தும் கவனம் செலுத்தும்.
இந்த மாநாட்டின் கருத்துரு, “நிலையான மேம்பாட்டிற்கான நீர்வளப் பாதுகாப்பு” (Water Security for Sustainable Development) என்பதாகும்.