பார்வையற்றோருக்கான இந்தியாவின் முதல் ரேடியோ (வானொலி) அலைவரிசை, ‘ரேடியோ அக்ஸ்’ என்ற பெயரில் மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் தொடங்கப் பட்டு உள்ளது.
நாக்பூரைச் சேர்ந்த 96 வருடங்கள் பழைமையான நிறுவனமான நாக்பூர் தி பிளைண்ட் ரிலீஃப் அசோசியேஷன் மற்றும் சம்த்ருஷ்டி சமதா விகாஸ் அவம் அனுசந்தன் மண்டல் ஆகியவை இந்தக் கருத்தாக்கத்தினை உருவாக்கிய நிறுவனங்கள் ஆகும்.
இந்த அலைவரிசையானது பல்வேறு இணைய வானொலி தளங்களில் இலவசமாகக் கிடைக்கப் பெறும்.