ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், தில்லி, இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்கள் ரேணுகா பல்நோக்கு அணைத் திட்டத்தை கட்டமைப்பதற்காக மத்திய நீர்வள அமைச்சகரான நிதின் கட்காரி முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தின் சிர்முர் மாவட்டத்தின் கிரி ஆற்றின் மீது ஒரு நீர்சேமிப்புத் திட்டமாக ரேணுகாஜி அணை திட்டம் உருவாகிறது.
தில்லி மற்றும் பிற பகுதிகளுக்கு 23 m3/S நீரினை வழங்குவதற்காக 148 மீட்டர் உயரம் கொண்ட கற்களைக் கொண்டு இந்த அணை கட்டப்படுகிறது.
ரேணுகாஜி பல்நோக்குத் திட்டம்
மூன்று திட்டங்கள் யமுனை நதியின் மீதும், அதன் இரண்டு கிளை ஆறுகளின் மீதும் கட்டமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அவையாவன
உத்தரகாண்ட்டில் உள்ள யமுனை நதியின் மீது லக்வார் திட்டம்.
உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள டோன்ஸ் நதியின் மீது கிஷாவ் திட்டம்.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கிரி நதியின் மீது ரேணுகாஜி திட்டம்.
இந்த மூன்று திட்டங்கள் 2008-ஆம் ஆண்டில் தேசிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் உள்கட்டமைப்பிற்கான செலவில் 90% நிதி இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும். மீதமுள்ள 10 சதவீதம் பயன்பெறும் மாநிலங்களால் ஏற்கப்படும்.