ரேபோ பாங்கின் 2021 உலகளாவிய 20 முன்னணி பால் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியல்
September 3 , 2021 1474 days 581 0
குஜராத் கூட்டுறவுப் பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான அமுல் நிறுவனம் இப்பட்டியலில் 18வது இடத்தில் உள்ளது.
2020 ஆம் ஆண்டின் பட்டியலில் அமுல் நிறுவனம் 16வது இடத்தில் இருந்தது.
பிரான்சு நாட்டில் அமைந்துள்ள பால்பொருள் நிறுவனமான லாக்டைல்ஸ் உலகின் மிகப்பெரிய பால்பொருள் நிறுவனமாக இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
பல தசாப்தங்களாக இப்பட்டியலில் முதலிடம் வகித்து வந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த உலகளாவிய நிறுவனமான நெஸ்லேயினை இது பின்னுக்குத் தள்ளியுள்ளது.
ரேபோ பாங்கின் உலகளாவிய 20 முன்னணி பால்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அறிக்கையானது, இத்துறை சார்ந்த நிறுவனங்களின் விற்பனைத் தரவு மற்றும் நிதியியல் அறிக்கைகளின் அடிப்படையில் தரப்படுத்துவதற்காக வேண்டி ஆண்டு தோறும் வெளியிடப் படுகிறது.