TNPSC Thervupettagam
May 24 , 2019 2187 days 834 0
  • மே 22 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ரைசாட் – 2பி (RISAT- 2b) என்ற செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  • ரைசாட் – 2 பி ஆனது ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் – 2பி என்பதைக் குறிக்கும்.
  • இது பின்வரும் துறைகள் மற்றும் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படவிருக்கின்றது.
    • வேளாண்மை, பேரிடர் மேலாண்மை மற்றும் வனங்கள்
    • அனைத்து விதமான வானிலைக் கண்காணிப்பு
    • பகல் மற்றும் இரவு நேரங்களில் இடங்களைப் படமெடுத்தல்
    • சிறு பொருட்களை ஆய்வு செய்து, அவற்றைக் கண்காணிப்பது.
  • இதர ரைசாட் செயற்கைக் கோள்கள்
ரைசாட் – 2 கண்காணிப்புப் பயன்பாடுகளுக்காக ரைசாட் வரிசையில் செலுத்தப்பட்ட முதலாவது செயற்கைக்கோள்.
ரைசாட் – 1 இந்தியாவின் முதலாவது அனைத்து விதமான வானிலை கண்காணிப்பு கொண்ட ராடார் இமேஜிங் செயற்கைக் கோளாகும்.
  • ரைசாட் - 2Bக்குப் பின்பு ரைசாட் – 2BR1, 2BR2, ரைசாட் 1A, 1B, 2A மற்றும் பல செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படவிருக்கின்றன.
  • விண்வெளியில் உள்ள ராடார் போன்ற இத்தகைய குழுக்களானது நாட்டின் மீது ஒரு முழுமையான கண்காணிப்பை மேற்கொள்கிறது.
  • ரைசாட் குறித்து அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் https://www.tnpscthervupettagam.com/isros-risat-2br1/.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்