TNPSC Thervupettagam

ரைசிங் லயன் நடவடிக்கை

June 17 , 2025 16 hrs 0 min 10 0
  • இஸ்ரேல் அரசானது ரைசிங் லயன் நடவடிக்கையின் கீழ் ஈரான் நாட்டின் அணுசக்தி தளங்களைக் குறி வைத்து தாக்கியது.
  • இந்த உயர் நிலை இலக்குகளில் நடன்ஸ் மற்றும் ஃபோர்டோவில் உள்ள சில அணுசக்தி நிலையங்களும் அடங்கும்.
  • கோண்டாப் மற்றும் கோர்ராமாபாத்தில் உள்ள அணுசக்தித் தளங்களும் குறிவைக்கப் பட்டன.
  • இந்த நடவடிக்கையானது, ஈரான் நாட்டின் ராணுவத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு ள்ளது.
  • ஈரான் நாட்டின் புரட்சிகர இராணுவப் படையின் (IRGC) விமானப்படை தளபதி அமீர் அலி ஹாஜிசாதே இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
  • IRGC தளபதி ஹொசைன் சலாமி மற்றும் ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பகேரி ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
  • கடந்த ஆண்டின் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் இஸ்ரேல் மீது ஈரானின் உந்து விசை எறிகணை மற்றும் ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களுக்கு IRGC விமானப் படைப் பொறுப்பேற்றது.
  • அதற்கு ஒரு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் நாடானது இஸ்ரேலைத் தாக்கி, ட்ரூ பிராமிஸ் III எனும் நடவடிக்கையினைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்