சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்களை டெல்லியில் இருந்து நாடு கடத்துவதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த ரோஹிங்கியாக்கள் வெளிநாட்டினர் என்பதால், அவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப் படலாம்.
முகமது சலிமுல்லா & மற்றவர்கள் மற்றும் இந்திய ஒன்றியம் & மற்றவர்கள் (2021) வழக்கின் போது, 14 மற்றும் 21 ஆகிய சரத்தின் கீழ் உள்ள உரிமைகள் அனைத்து நபர்களுக்கும் (குடிமக்கள் அல்லாதவர்கள் உட்பட) கிடைக்கப் பெறுகின்றன என்பதை உச்ச நீதிமன்றம் எடுத்துரைத்தது.
ஆனால் நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமையானது, 19(1)(e)வது சரத்தின் கீழ் உள்ள, வசிப்பதற்கான அல்லது குடியேறுவதற்கான உரிமையின் துணைப் பிரிவு அல்லது அதனுடன் தொடர்புடையது ஆகும்.
1951 ஆம் ஆண்டு அகதிகள் உடன்படிக்கை மற்றும் அதன் மீதான 1967 ஆம் ஆண்டு நெறிமுறையில் இந்தியா கையெழுத்திட்டதில்லை.
மேலும், 'அகதிகள்' குறித்த விவகாரங்களை கையாளுவதற்காக இந்தியாவிடம் தனிச் சட்டமும் இல்லை.
எனவே, அகதி 'நிலைக்கான' நீதிமன்ற வழக்குகள் ஆனது, இருதரப்புக் கொள்கையின் அடிப்படையில் ஒவ்வொரு வழக்குக்கும் தனித்தனியே பரிசீலிக்கப்படுகின்றன.
அகதிகள் 'அயல் நாட்டவர்' மற்றும் 'வெளிநாட்டினர்' என்ற ஒரு வரையறையின் கீழ் வருகிறார்கள்.
1920 ஆம் ஆண்டு கடவுச் சீட்டு (இந்தியாவிற்குள் நுழைதல்) சட்டத்தின் படி, கடவுச்சீட்டு மற்றும் நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் இந்தியாவிற்குள் நுழையும் எந்தவொரு வெளிநாட்டினரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிடலாம்.
அரசியலமைப்பின் 258(1) மற்றும் 239(1) ஆகிய சரத்துகளின் படி, இந்திய மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களுக்கும் இந்த அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன.