TNPSC Thervupettagam

லக்பதி தீதி திட்ட விரிவாக்கம்

February 18 , 2026 19 hrs 0 min 16 0
  • இந்திய அரசு லக்பதி தீதி திட்டத்தின் முந்தைய 3 கோடி இலக்கை முன்னதாகவே அடைந்ததையடுத்து பயனாளிகளின் எண்ணிக்கையை மார்ச் 2029க்குள் 6 கோடி பெண்களை இலக்காக உயர்த்தியுள்ளது.
  • சுய உதவிக் குழுக்களில் (SHGs) பெண்கள் வாழ்வாதார நடவடிக்கைகள் மூலம் குறைந்த பட்சம் 1 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்ட இந்தத் திட்டம் உதவுகிறது.
  • 2026–27 ஆம் ஆண்டுக்கான மத்தியப் பட்ஜெட்டில், அரசாங்கம் “SHE-Marts” (சுய உதவி தொழில்முனைவோர் சந்தைகள்) தொடங்குவதாக அறிவித்தது.
  • நாடு முழுவதும் சுய உதவிக் குழு தயாரிப்புகளுக்கு SHE-Marts சிறந்த சந்தைப்படுத்தல் தளங்களை வழங்கும்.
  • இந்த முயற்சி வருமான வாய்ப்புகளை அதிகரிப்பதையும் கிராமப்புறப் பெண்களின் தொழில்முனைவோரை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்