TNPSC Thervupettagam

லக்பதி பிடியா யோஜனா

February 15 , 2026 20 days 69 0
  • டெல்லி அரசு, பெண் குழந்தைகளின் கல்வியை ஆதரிப்பதற்கும், நிதி நெருக்கடி காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்துபவர்களைக் குறைப்பதற்கும் லக்பதி பிடியா யோஜனாவை அறிவித்தது.
  • ஏப்ரல் 1, 2026 அன்று தொடங்கும் இந்தத் திட்டம், ஒரு பெண்ணின் பள்ளிப் படிப்பு மற்றும் உயர்கல்வியின் போது மொத்தம் 56,000 நிதி உதவி வழங்கும் என்பதோடு  இது வட்டியுடன் சேர்த்து சுமார் 1 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நேரடிப் பலன் பரிமாற்றத்தையும் சிறந்த கண்காணிப்பையும் உறுதி செய்வதற்காக, பெண்ணின் பெயரில் உள்ள ஆதார் வசதி கொண்ட வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
  • இறுதித் தொகையானது, சிறுமிக்கு 21 வயது ஆகும் போது அல்லது பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடிக்கும்போது, ​​எது முன்னதாக வருகிறதோ அப்போது வழங்கப் படும்.
  • பிறப்பு, வகுப்பு 1, வகுப்பு 6, வகுப்பு 9, வகுப்பு 10 மற்றும் வகுப்பு 12 உள்ளிட்ட பள்ளிப் படிப்பு மைல்கற்களுடன் தவணைகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதோடு பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பிற்குப் பிறகு கூடுதல் நிதியும் வழங்கப்படுகிறது.
  • இந்தத் திட்டம் டெல்லியில் பிறந்து குறைந்தது மூன்று வருடங்கள் நகரில் வசித்து வரும் மற்றும் ஆண்டு வருமானம் 1 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக உள்ள பெண் குழந்தைகளுக்கானது என்பதோடு இச்சலுகைகள் ஒரு குடும்பத்திற்கு இரண்டு மகள்களுக்கு மட்டுமே பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்