இலச்சித் போர்புகனின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
இது முக்கியமாக அசாமில் அவரது வீரத்தையும் தலைமையையும் கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
அஹோம் பேரரசின் தளபதியாக இருந்த இலச்சித் போர்புகன் சராய்காட் போரில் (1671) இராணுவத்தை வழிநடத்தினார்.
இந்தப் போரில், பிரம்மபுத்திரா நதிக்கரையில் ராம் சிங் தலைமையிலான முகலாயப் படையை அஹோம் படைகள் தோற்கடித்தன.
தேசியப் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனம் (NDA) 1999 ஆம் ஆண்டு முதல் சிறந்த தேர்ச்சி பெற்ற படைப்பிரிவிற்கு இலச்சித் போர்புகன் தங்கப் பதக்கம் வழங்கி வருகிறது.