லடாக் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணை கோரிக்கை
March 19 , 2026 2 days 46 0
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து, பொதுப் பணியாளர் தேர்வாணையம் (PSC) மற்றும் அதிக பிரதிநிதித்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி லே மற்றும் கார்கில் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-க்குப் பிறகு, லடாக் சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசமாக மாறியது என்பதோடுஇது "பிரதிநிதித்துவப் பற்றாக்குறைக்கு" வழி வகுத்தது.
அங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 97% பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் நிலம், கலாச்சாரம் மற்றும் நுணுக்கமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கக் கோருகின்றனர்.
தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்களை (ADCs) அமைப்பதற்காக, இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் (சரத்து 244(2)) லடாக்கைச் சேர்க்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆறாவது அட்டவணை அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் பழங்குடியினப் பகுதிகளுக்குப் பொருந்தும்.
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளைக் கொண்டிருப்பதால் ஏற்படும் மூலோபாயப் பாதுகாப்பு கவலைகள் மற்றும் அரசியலமைப்புச் சவால்களும் இதில் அடங்கும்.
லடாக் இட ஒதுக்கீடு (திருத்தம்) ஒழுங்குமுறை 2025, உள்ளூர் மக்களுக்கு 85% இட ஒதுக்கீடு மற்றும் இருப்பிட அடிப்படையிலான பாதுகாப்புகளை வழங்குகிறது.