லடாக்கி ஷொண்டோல் நடனமானது உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
வருடாந்திர நரோபா விழாவின் போது 408 பெண் கலைஞர்கள் ஷொண்டோல் நடனத்தை நிகழ்த்தினர்.
நரோபா திருவிழா என்பது லடாக்கில் உள்ள 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஹெமிஸ் மடாலயத்திற்கு அருகில் நடந்து வரும் ஒரு புத்த மதத் திருவிழாவாகும்.
ஷொண்டோல் என்பது லடாக்கின் அரசர் கால பாரம்பரிய நடனம் ஆகும்.
சிறப்பு நிகழ்வுகளின் போது லடாக் மன்னரைப் புகழ்வதற்காக தக்ஷோமா அல்லது பெண் நடனக் கலைஞர்களால் இந்த நடனம் நிகழ்த்தப்படுகின்றது.