செப்டம்பர் 24 ஆம் தேதியன்று லேவில் நடைபெற்ற வன்முறைக்குப் பிறகு, லடாக்கில் உள்ள உரிமையியல் சமூகக் குழுக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.
லே உச்ச அமைப்பு (LAB) மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி (KDA) சோனம் வாங்சுக் மற்றும் கைது செய்யப்பட்ட 20 போராட்டக்காரர்களை விடுவிக்கக் கோரின.
அரசியலமைப்பின் 371வது சரத்தின் கீழ் லடாக்கிற்கு சிறப்பு விதிகள் பரிசீலிக்கப்ப டலாம் என்று உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியது.
சரத்து 371 "தற்காலிக, இடைக்கால மற்றும் சிறப்பு ஏற்பாடுகள்" பற்றிக் கையாள்கிறதுஎன்பதோடு மேலும் அரசியலமைப்பின் பகுதி XXIன் கீழ் இது உள்ளது.
இது தற்போது நாகாலாந்து, அசாம், மணிப்பூர், மிசோரம், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, அருணாச்சலப் பிரதேசம், கோவா, சிக்கிம் மற்றும் கர்நாடகாஆகிய 12 மாநிலங்களுக்குப் பொருந்தும்:.
பழங்குடியினர் அந்தஸ்து மற்றும் சுயாட்சிக்காக அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க LAB மற்றும் KDA தொடர்ந்து கோரி வருகின்றன.
370வது சரத்தின் கீழ் சிறப்பு அந்தஸ்தை இழந்த பிறகு, 2019 ஆம் ஆண்டு முதல் லடாக் சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசமாக செயல்பட்டு வருகிறது.