2026 ஆம் ஆண்டின் ஒன்றிய நிதிநிலையறிக்கையானது இரண்டு புதிய தொலை நோக்கிகள் மற்றும் லடாக்கில் ஏற்கனவே உள்ள தொலைநோக்கியின் மேம்படுத்தலுக்கு ஒப்புதல் அளித்தது.
சூரியன் மற்றும் விண்வெளி வானிலையை ஆய்வு செய்வதற்காக லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ அருகே உள்ள மெராக் நகரில் National Large Solar Telescope அமைக்கப்படும்.
ஹென்லேவின் இரவு வான்வெளிப் பகுதியில், வெளிப்புறக் கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக, National Large Optical–Near Infrared Telescope கட்டமைக்கப்படும்.
ஹென்லேவில் உள்ள இமயமலை சந்திரா தொலைநோக்கி ஒரு பெரிய கண்ணாடிப் பிரிவுடன் மேம்படுத்தப்படும்.