லடாக் மாநில வனவிலங்கு வாரியம் ஆனது கரகோரம் வனவிலங்கு சரணாலயத்தை 16,550 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்த முன்மொழிந்துள்ளது.
சாங்தாங் வனவிலங்கு சரணாலயத்தினை 9,695 சதுர கிலோமீட்டராக விரிவு படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டில் வெளியான அறிவிப்புகள், கரகோரத்திற்கு சுமார் 5,000 சதுர கிலோ மீட்டரும் சாங்தாங்கிற்கு 4,000 சதுர கிலோமீட்டரும் என பதிவு செய்தன.
இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) இரண்டு சரணாலயங்களிலும் அதிக வளங்காப்பு மதிப்புள்ள பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.
கரகோரத்தில் 1,742 சதுர கிலோமீட்டர் மற்றும் சாங்தாங்கில் 164 சதுர கிலோமீட்டர் உட்பட சில மக்கள் வசிக்கும் பகுதிகள் இதில் விலக்கப்படும்.
இந்தத் திருத்தங்கள், உள்ளூர்வாசிகள் சிறிய அளவிலான சுற்றுலா உள்கட்டமைப்பை உருவாக்குவதையும், அத்தியாவசிய சேவைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.