சீனாவின் எல்லையில் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இந்திய இராணுவம் ஒரு அனைத்து ஆயுதப் படை ஒருங்கிணைந்த பயிற்சியை ‘சாங் தாங் பிரஹார்’ என்னுமிடத்தில் நடத்தியது.
கடுமையான நிலப் பரப்பு மற்றும் அதிக உயரத்தில் போராடும் இராணுவத்தின் திறனை வெளிப்படுத்தவும் சோதிக்கவும் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
இத்தகையப் பயிற்சியானது முதல் முறையாக இப்பகுதியில் நடந்துள்ளது.
லடாக்கில் உள்ள பாங்கோங் சோவின் வட கரையில் (சோ என்றால் ஏரி) இந்திய மற்றும் சீனப்படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் பின்னணியில் இந்தப் பயிற்சியானது நடைபெறுகின்றது.
இந்தப் பயிற்சியில் இராணுவத்தின் விமானப் படையின் சொத்துக்கள் பயன்படுத்தப் பட்டன. மேலும் இந்தப் பயிற்சியில் விமானப் படையும் பங்கேற்றது.