லடாக் ஒன்றியப் பிரதேசமானது தனது முதலாவது எழுச்சி தினத்தை அக்டோபர் 31 ஆம் தேதி அனுசரித்தது. இது அந்த ஒன்றியப் பிரதேசத்தின் நிறுவன தினமாக விளங்குகின்றது.
ஒன்றியப் பிரதேசமாக லடாக்கின் முதலாமாண்டுக் கொண்டாட்டத்திற்கான கருத்துரு, “வளர்ச்சி, செழுமை, மேம்பாடு ஆகியவற்றின் 1 ஆண்டு” என்பதாகும்.
இந்தப் பகுதியானது தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
இது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று மத்திய அரசினால் ஆளப்படும் ஒரு ஒன்றியப் பிரதேசமாக உருவெடுத்தது.