லான்ஸ்டவுன் இராணுவக் குடியிருப்புப் பகுதி பெயர் மாற்றம்
July 10 , 2023 744 days 369 0
உத்தரகாண்ட்டில் அமைந்துள்ள லான்ஸ்டவுன் என்ற ஒரு இராணுவக் குடியிருப்பினை ரைபிள்மேன் ஜஸ்வந்த் சிங் ராவத்தின் பெயரால் ஜஸ்வந்த்கர் என மறுபெயரிட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
லான்ஸ்டவுன் 1888 முதல் 1894 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக (வைஸ்ராயாக) பணியாற்றிய ஒரு ஆங்கிலேய அரசியல்வாதி ஆவார்.
கர்வால் ரைபிள்ஸ் ஆயுதப் படையில் சேர்க்கப்படும் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் இராணுவக் குடியிருப்பு மற்றும் படைப்பிரிவு மையம் ஆனது கலுந்தண்டா என்று வெகு பிரபலமாக அறியப்படும் வனப்பகுதியில் அமைந்துள்ளது.
ஜஸ்வந்துக்கு அவரது மரணத்திற்குப் பின்னராக மகா வீர் சக்ரா விருது வழங்கப் பட்ட நிலையில், அவரது படைப்பிரிவிற்கு ஒரு போர் முறை கௌரவ விருதான நூரானாங் விருதானது வழங்கப் பட்டது.