லாரியஸ் விளையாட்டின் சிறந்த தருணத்திற்கான விருதை (2000-2020) சச்சின் டெண்டுல்கர் வென்றுள்ளார்.
‘சக வீரர்களின் தோள்களினால் சுமந்துச் செல்லப்படுதல்’ என்ற தலைப்பு கொண்ட சச்சின் டெண்டுல்கரின் புகைப்படத்திற்கு 2020 ஆம் ஆண்டின் லாரியஸ் விளையாட்டு விருதானது வழங்கப் பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கரை இந்திய அணியினர் தோள்களில் சுமந்து செல்லும் புகைப்படத்தை “சிறந்த விளையாட்டு தருணத்திற்கான விருதுக்காக” தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர்.
லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள் என்பது விளையாட்டு உலகில் சிறந்து விளங்கும் தனிநபர்களையும் அணிகளையும் கௌரவிக்கும் வருடாந்திர விருது வழங்கும் ஒரு விழாவாகும்.
இது 1999 ஆம் ஆண்டில் “லாரியஸ் ஸ்போர்ட் ஃபார் குட் ஃபவுண்டேஷனால்” நிறுவப் பட்டது.
இந்த நிகழ்வானது ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்றது.