TNPSC Thervupettagam

லாரூஸ் உலக விளையாட்டு விருதுகள் 2024

April 28 , 2024 19 days 111 0
  • 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச் 5வது முறையாக லாரூஸ் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
  • FIFA உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் நாட்டின் ஐடானா பொன்மட்டி, ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை வென்ற முதல் கால்பந்து வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • இங்கிலாந்தின் நட்சத்திரக் கால்பந்து வீரர் ஆன ஜூட் பெல்லிங்ஹாம், ரியல் மாட்ரிட் நகரில் தனது ஆரம்பகாலத் தாக்கத்திற்காக லாரூஸ் ஆண்டின் திருப்புமுனை விருதை வென்றுள்ளார்.
  • மிகவும் பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பைல்ஸ்க்கு, கடந்த ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் அவரின் மறு அறிமுகத்திற்காக இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.
  • லாரூஸ் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த அணி விருது ஸ்பெயின் நாட்டின் மகளிர் கால்பந்து அணிக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்