லிங்க்ட்இன் லைட் (LinkedIn Lite ) செயலி : இந்தியாவில் முதலில் வெளியிடப்படுகிறது
July 21 , 2017 3015 days 1478 0
லிங்க்ட்இன் என்பது தொழில்முறை சமூக வலையமைப்பு ஆகும் . இந்தியாவில் சுமார் 42 மில்லியன் மக்கள் இந்த இணையதளத்தில் உறுப்பினர்களாக உள்ளனர் . இந்நிலையில் லிங்க்ட்இன் நிறுவனம், ‘லிங்க்ட்இன் லைட்’ என்ற புதிய ஆண்டிராய்டு செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது . முன்னர் இருக்கும் லிங்க்ட்இன் செயலியை விட இது இலகுவானதும் வேகமாக இயங்கக்கூடியதும் ஆகும்.
‘லிங்க்கிடின் லைட்’ செயலியின் முதற்கட்ட பதிப்பு, இந்தியாவில் உள்ள உறுப்பினர்களுக்கு பதிவிறக்கம் செய்ய வெளியிடப்பட்டுள்ளது.
அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் லிங்க்ட்இன் இணையதளத்தின் கைப்பேசி இணக்கப் பதிப்பு மற்றும் ஆண்ட்ராய்டு செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.