TNPSC Thervupettagam

லித்தியம்-அயனி மின்கல உற்பத்தி ஆலை

September 11 , 2025 12 days 63 0
  • இந்தியாவின் மிகப்பெரிய லித்தியம்-அயனி (Li-ion) மின்கல உற்பத்தி ஆலை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் தேதியன்று ஹரியானாவின் குர்கானில் உள்ள சோஹ்னாவில் திறக்கப்பட்டது.
  • இது இந்தியாவின் மொத்த 50 கோடி மின்கலத் தொகுப்புகளுக்கான தேவையில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தினைப் பூர்த்தி செய்யும்.
  • இந்த வசதியானது மத்திய அரசின் மின்னணு உற்பத்தி தொகுப்புத் (EMC) திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
  • லித்தியம்-அயனி (Li-ion) மின்கலங்கள் கிராஃபைட் (எதிர்மறை மின்முனை) மற்றும் லித்தியம் உலோக ஆக்சைடுகள் (நேர்மறை மின்முனை) இடையே நீர் அல்லாத மின்பகுளி மூலம் நகரும் லித்தியம் அயனிகளுடன் மின்னேற்றம் செய்யக் கூடியவை.
  • ஒரு கிலோகிராமுக்கு 75-200 வாட்-மணிநேரம் என்ற அதிக ஆற்றல் செறிவினை வழங்குகின்ற இவை, இலகுவானவை என்பதோடு குறைவான நச்சு உலோகங்களைப் பயன்படுத்துகின்றன என்ற நிலையில் மேலும் நல்ல சுழற்சி நிலைத்தன்மை மற்றும் செயல்திறனை இவை வழங்குகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்