லித்துவேனியாவில் புதிய இந்தியத் தூதரகத்தை நிறுவுவதற்கான முன்மொழிதலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பால்டிக் பிராந்தியத்தில் அமைய உள்ள இந்தியாவின் முதல் முழு அளவிலான தூதரகம் இதுவாகும்.
லித்துவேனியா, தனது பிராந்தியத்தில் தைவான் நாட்டின் ஒரு அதிகாரப் பூர்வத் தூதரகத்தை நிறுவ அனுமதித்ததை அடுத்து, சீனாவுடனான அரசுமுறை சண்டையின் ஒரு மையமாக உள்ளது.
2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் தூதரகத்தைத் திறந்த முதல் பால்டிக் நாடு லித்துவேனியா ஆகும்.