உத்தரகாண்டின் லிபுலேக் கணவாய் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஒப்பந்தம் நேபாளத்தில் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
லிபுலேக் ஆனது அதன் எல்லைக்குள் வருவதாக நேபாளம் கூறுகிறது.
இந்தியா-நேபாள எல்லையானது 1816 ஆம் ஆண்டு சுகௌலி ஒப்பந்தத்தினால் வரையறுக்கப்பட்டது என்பதோடு இது காளி நதியை அதன் எல்லையாக நிர்ணயித்தது.
நேபாளத்தின் கூற்றில், காளி நதி லிம்பியாதுராவில் உருவாகின்றதால், சுகௌலி ஒப்பந்தத்தின் கீழ் சர்ச்சைக்குரிய பகுதியை அதன் பிரதேசமாக்குகிறது.
இந்தியாவின் கூற்றில், இந்த நதி காலாபானி கிராமத்தில் தொடங்குகின்றதால், இந்தப் பகுதி இந்திய எல்லைக்குள் வருகிறது.