மத்தியக் கல்வித் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ அவர்கள் லீலாவதி விருதுகளை வெளியிட்டு உள்ளார்.
லீலாவதி விருதுகளானது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கான கழகத்தின் (AICTE - All India Council for Technical Education) ஒரு முன்னெடுப்பாகும்.
இது AICTEயினால் அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ள கல்வி நிறுவனங்களில் பெண்கள் மதிக்கப் படுவதை மேற்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விருதுகளானது பெண்கள் மேம்பாடு என்ற கருத்தின் அடிப்படையில் வழங்கப் படுகின்றது.
12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “லீலாவதி” என்ற புத்தகத்தின் நினைவாக இதற்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகமானது கணிதவியலாளரான இரண்டாம் பாஸ்கரா என்பவரால் எழுதப் பட்டு உள்ளது.
லீலாவதி என்பவர் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியக் கணிதவியலாளர் இரண்டாம் பாஸ்கராவின்மகள் ஆவார்.
இந்தப் பரிசானது 2010 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வதேசக் கணிதவியலாளர்கள் மாநாட்டில் முதன்முறையாக வழங்கப் பட்டது.