ஸ்பெயின் நாட்டின் ஒரு தொழில்நுட்ப நிறுவனமான GMV ஆனது, நிலவிற்கான GPS போன்ற வழிகாட்டுதல் அமைப்பினை வெளியிட்டுள்ளது.
LUPIN என்று பெயரிடப் பட்டுள்ள இந்த முக்கியத் திட்டமானது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
கூகுள் மேப்ஸ் அல்லது வேஸ் போன்ற செயலிகள் உதவியுடன் நகரம் முழுவதும் நாம் பயணம் செய்வது போல நிலவு ஆய்வுப் பயணங்களை மேற்கொள்வதை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.