இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பேசல் வங்கி மேற்பார்வைக் குழுவின் (BCBS) தர நிலைகளுடன் ஒத்துப் போகும் வகையில் தனது மூலதனப் போதுமான அளவு கட்டமைப்பை திருத்தியுள்ளது, புதிய லெவரேஜ் விகித விதிகள் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
உள்நாட்டு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளுக்கான (D-SIBs) குறைந்தபட்ச லெவரேஜ் விகிதம் 4% ஆகவும் மற்ற வங்கிகளுக்கு 3.5% ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
லெவரேஜ் விகிதம் என்பது சொத்துகளின் அபாயங்களைக் கருத்தில் கொள்ளாமல், வங்கியின் மொத்த வெளிப்பாடுகளுக்கு எதிரான அதன் முக்கிய மூலதனத்தை அளவிடுவதாகும்.
இருப்புநிலைக் குறிப்புச் சொத்துக்கள், வழித்தோன்றல்கள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பு இல்லாத வெளிப்பாடுகள் உள்ளிட்டவற்றுடன் வங்கிகள் எப்போதும் குறைந்தபட்ச விகிதத்தை பராமரிக்க வேண்டும்.
இந்தக் கட்டமைப்பானது அபாய எடை கொண்ட மூலதனத் தேவைகளுக்கான ஒரு தடுப்பாகச் செயல்படுவதுடன் வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்பின் பின்னடைவுத் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திருத்தப்பட்ட கட்டமைப்பைச் செயல்படுத்தக் கூடுதல் கால அவகாசம் கோரிய வங்கிகளின் கோரிக்கையை RBI நிராகரித்துள்ளது.