TNPSC Thervupettagam

லேண்ட்ரேஸ் விதைக் கொள்கை

August 6 , 2025 16 days 86 0
  • ஒடிசா மாநில அரசானது, லேண்ட்ரேஸ் எனப்படும் பாரம்பரிய விதை வகைகளை முறையான விதை முறைகளில் ஒருங்கிணைக்க ஒரு சீர்தர இயக்க முறையை (SOP) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • வேளாண் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதையும், விவசாயிகளின் அறிவு மற்றும் சமூக விதை முறைகளுக்குப் பெரும் முன்னுரிமை அளிப்பதன் மூலம் சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதையும் SOP நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • லேண்ட்ரேஸ்கள் உள்ளூர் வேளாண் சார் பருவநிலையின் சூழல்களுக்கு ஏற்றவாறு மரபணு ரீதியாக வேறுபட்ட பாரம்பரியப் பயிர் வகைகளாகும் என்பதோடு மேலும் இவை பருவ நிலை மீள்தன்மை, பூச்சிகளுக்கு எதிரான சகிப்புத்தன்மை மற்றும் ஊட்டச்சத்து செழுமை போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன.
  • இந்த முன்னெடுப்பானது பருப்பு வகைகள், கிழங்குகள், தானியங்கள் மற்றும் பிற பாரம்பரிய பயிர்களை உள்ளடக்கிய முந்தைய சிறு தானியம் சார்ந்த முன்னெடுப்புகளை விரிவுபடுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்