TNPSC Thervupettagam

லோக்பால் தலைவர் பொறுப்பு

June 3 , 2022 1162 days 4242 0
  • குடியரசுத் தலைவர் அவர்கள் லோக்பால் தலைவர் பதவிக்கான கூடுதல் பொறுப்பினை நீதிபதி பிரதீப் குமார் மொகந்தியிடம் அளித்துள்ளார்.
  • லோக்பால் தலைவராக இருந்த நீதிபதி பினாகி சந்திர கோசின் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து இவர் இந்தப் பதவியை வகிக்க உள்ளார்.
  • லோக்பால் ஒரு தலைவரையும் எட்டு உறுப்பினர்களையும் கொண்டதாகும்.
  • தற்போது, ​​லோக்பாலில் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர்.
  • நீதித்துறை உறுப்பினர்களின் இரண்டு பதவிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன.
  • லோக்பால் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயதை அடையும் வரை பதவி வகிப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்