TNPSC Thervupettagam

லோனார் விண்கல் பள்ளத்தாக்கு ஏரி சூழலியல் அமைப்பு

February 11 , 2026 2 days 49 0
  • அதிகரித்து வரும் நன்னீர் வரத்து மகாராஷ்டிராவில் உள்ள லோனார் விண்கல் பள்ளத்தாக்கு ஏரியின் சூழலியல் சமநிலையை சீர்குலைக்கிறது.
  • மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி, இந்தியாவின் ஒரே பாசால்டிக் விண்கல் தாக்கப் பள்ளத்தாக்கு ஏரியாகும்.
  • இந்த ஏரி சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு டெக்கான் பாசால்ட் பகுதியில் ஒரு விண்கல் தாக்கியபோது உருவாக்கப்பட்டது.
  • இது உவர்ப்பு மற்றும் கார நீர் சூழலியல் அமைப்புக்குப் பெயர் பெற்ற ராம்சார் ஈர நிலமாகும்.
  • மழைப்பொழிவு மற்றும் அருகிலுள்ள ஆழமான போர்வெல்கள் நன்னீர் வரத்தை அதிகரித்து, ஏரியின் வேதியியல் கலவையை மாற்றுகின்றன.
  • இது உப்புத் தன்மையைக் குறைத்து, ஏரியில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் பல்லுயிர்த் தன்மையைப் பாதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்