March 12 , 2026
5 days
88
- தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனார் (V.O.C.) துறைமுகம், ஒரே கப்பலில் இருந்து 147 காற்றாலை இறக்கைகளை கையாண்டு புதிய தேசிய சாதனை படைத்துள்ளது.
- இது, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இதே துறைமுகத்தால் கையாளப்பட்ட 103 காற்றாலை இறக்கைகள் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
- நாட்டின் எந்தவொரு துறைமுகத்திலும் ஒரே கப்பலில் இருந்து கையாளப்பட்ட மிக அதிகபட்ச அளவு இதுவாகும்.
- 147 காற்றாலை இறக்கைகளுடன் 'எம்.வி. போ ரன் ஜியு சோ' (MV Bo Run Jiu Zhou) என்ற கப்பல் சீனாவின் கின்ஜோ துறைமுகத்திலிருந்து வந்தது.
- இந்தியாவில் காற்றாலை இறக்கைகளைக் கையாளுவதில் வ.உ.சி துறைமுகம் முன்னணித் துறைமுகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Post Views:
88